Tuesday, March 24, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன்!!!

A
Admin User
Journalist
June 06, 2022 5 min read 59 views
ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன்!!!

உங்களுக்கு சிக்கன் ரொம்ப பிடிக்குமா? அதிலும் வித்தியாசமாக சிக்கன் ரெசிபி செய்து சாப்பிட ஆர்வம் அதிகமா? அப்படியெனில் ஆந்திரா ஸ்டைலில் ஒரு அருமையாக சிக்கன் ரெசிபி செய்து பாருங்கள். அது தான் கோங்குரா சிக்கன். கோங்குரா என்பது புளிச்ச கீரை. புளிச்ச கீரையை வைத்து செய்யும் ஒரு சிக்கன் ரெசிபி. அதனால் சற்று புளிப்பாக ஆனால் அட்டகாசமான சுவையில் இருக்கும். ஒரு முறை இதை செய்து பாருங்கள், பின்னர் வீட்டில் உள்ளவர்கள் இதை அடிக்கடி செய்து தர சொல்லி கேட்பார்கள். இந்த கோங்குரா சிக்கன் சாதம், சப்பாத்தி, பூரி போன்றவற்றிற்கு அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும். சரி வாருங்கள், இப்போது ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன் எப்படி செய்வதென்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்

  • சிக்கன் - 1/2 கிலோ
  • வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 4 (கீறியது)
  • இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
  • பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது)
  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 1 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப

வறுத்து அரைப்பதற்கு…

  • வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
  • மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
  • வரமிளகாய் - 4
  • சோம்பு - 1 டீஸ்பூன்

கோங்குரா மசாலாவிற்கு…

  • நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
  • பூண்டு - 4 பல்
  • கோங்குரா கீரை/புளிச்சக்கீரை - 2 கப் (நறுக்கியது)
  • உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுக்க தேவையான பொருட்களாக வெந்தயம், சோம்பு, மல்லி, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வறுத்து ஆற வைத்து, ஒரு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
  • அடுத்ததாக, ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அத்துடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து அது நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
  • பின்னர், சிக்கனை அதனுடன் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
  • பின்பு, கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கவும்.
  • குக்கர் விசில் முழுவதும் அடங்கியதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து வதக்கி, புளிச்ச கீரையை சேர்த்து, சிறிது உப்பு மற்றும் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி, 3-4 நிமிடம் மசாலாவுடன் கீரை நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
  • கீரை நன்கு வெந்ததும், வேக வைத்த சிக்கனுடன் சேர்த்து, குக்கரை மீண்டும் மூடி வைத்து, 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையாக ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன் தயார்.

Image Courtesy: archanaskitchen

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,000
தங்கம் (24k)
1 கிராம்
₹13,650
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க